/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'வாழ்க்கையை அறநெறிப்படி யாருக்கும் துன்பம் கொடுக்காமல் வாழ வேண்டும்'
/
'வாழ்க்கையை அறநெறிப்படி யாருக்கும் துன்பம் கொடுக்காமல் வாழ வேண்டும்'
'வாழ்க்கையை அறநெறிப்படி யாருக்கும் துன்பம் கொடுக்காமல் வாழ வேண்டும்'
'வாழ்க்கையை அறநெறிப்படி யாருக்கும் துன்பம் கொடுக்காமல் வாழ வேண்டும்'
ADDED : ஜன 02, 2025 01:26 AM
ஈரோடு, ஜன. 2-
ஈரோட்டில் உலக சமுதாய சேவா சங்கம், ஈரோடு மனவளக்கலை மன்றம் சார்பில், ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, உலக அமைதி தின வேள்வி நடைபெற்றது.
உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன் தலைமை வகித்து, வேள்வியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: புத்தாண்டில் நாம் அனைவரும் பிறரை பற்றி சிந்திக்காமல் நம்மை பற்றி சிந்தித்து, நமது குறைகளை கவனித்து நமது ஒழுக்கத்தை நல்லொழுக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். தொலைநோக்கு பார்வை கொண்ட வேதாத்திரி மகரிஷி நமக்கு யோகத்தையும், தியானத்தையும் இணைத்து கொடுத்துள்ளார். பிரதமர் மோடி முயற்சியால் ஜூன், 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு முதல் டிச., 21ம் தேதி சர்வதேச தியான தினமாகவும் கடைப்பிடிக்கப்பட உள்ளது. எப்போது எல்லாம் எண்ணங்கள் மாறுகிறதோ? அப்போது துன்பம்தான் வருகிறது. நம்முடைய பிரச்னையை விட்டு அடுத்தவர்களின் பிரச்னைகளை கொண்டாடுகிறோம். இறைவனால் கொடுக்கப்பட்ட, நம் கர்மாவால் நாமாக உருவாக்கி கொண்ட வாழ்க்கையை ஏற்று கொண்டு வாழ வேண்டும். இனிமேல் எஞ்சி இருக்கும் வாழ்க்கையை, அறநெறிப்படி வாழ முயற்சி செய்ய வேண்டும். முடிந்த வரை யாருக்கும் துன்பம் கொடுக்காத வாழ்க்கையை வாழ வேண்டும். இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து, முதுநிலை பேராசிரியர் உழவன் தங்க வேலு நிறைவுரையற்றினார். திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

