ADDED : மே 09, 2026 03:57 AM
ஈரோடு: ஈரோடு மாநகரில் நேற்று முன்திம் இரவு, 9:30 மணிக்கு பலத்த காற்று வீச தொடங்கியது. 15 நிமிடங்களில் சாரலாக துவங்கிய மழை, சில நிமிடத்தில் கனமழையாக மாறி கொட்ட
தொடங்கியது.
அரை மணி நேரம் இடைவெளி விட்டு விட்டு அதிகாலை, 3:௦௦ மணி வரை கொட்டி தீர்த்தது. கனமழையால் வீரப்பன்சத்திரம், ஆர்,கே.வி. ரோடு, மணிக்கூண்டு, நசியனுார் ரோடு, காளைமாட்டு சிலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மழை நீரால் சாலைகள் மூழ்கின. இரவு நேரம் என்பதால் போக்குவரத்து பாதிக்கவில்லை.
அதேசமயம் வீரப்பன்சத்திரம், பெரியவலசு உள்ளிட்ட பகுதிகளில் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விடியவிடிய கொட்டிய மழையால் நேற்று பகலில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
ஈரோட்டில் 66 மி.மீ., மழை
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம், பரவலாக இடியுடன் பலத்த மழை பதிவானது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஈரோடு மாநகரில், 66 மி.மீ., மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): கவுந்தப்பாடி - 46.2, பெருந்துறை-40, கொடிவேரி அணை-39, குண்டேரிப்பள்ளம் அணை-20.4, கொடுமுடி-15.8, மொடக்குறிச்சி-14, நம்பியூர்-13, சத்தியமங்கலம்-13, தாளவாடி-10.8, பவானி-9.6, சென்னிமலை-6, இலந்தைகுட்டைமேடு-5, கோபி-3.2.
