/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நர்சிங் கல்லுாரியில் ஒளி விளக்கேற்றும் விழா
/
நர்சிங் கல்லுாரியில் ஒளி விளக்கேற்றும் விழா
ADDED : மே 10, 2024 07:03 AM
ஈரோடு : கோபி அருகே ஒத்தக்குதிரையில், ஸ்ரீவெங்கடேஸ்வரா செவிலியர் கல்லுாரியில், ஒளி விளக்கேற்றும் விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் கலந்து கொண்டார். விரிவுரையாளர் ஜனனி வரவேற்றார். கல்லுாரி செயலாளர் கே.சி.கருப்பணன் தலைமை வகித்தார்.தலைவர் வெங்கடாச்சலம், அறங்காவலர் கே.ஆர்.கவியரசு, முதன்மை செயல் அதிகாரி ஜி.கெளதம், ஆசிரியர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியை தொடர்ந்து, அம்பிகா சண்முகமிடருந்து தீபத்தை, கல்லுாரி முதல்வர் டாக்டர் முத்துக்கண்ணு பெற்று, ஆசிரியர்கள்-மாணவர்களிடையே கொடுத்தார். விரிவுரையாளர் பூமணி நன்றி கூறினார்.