/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
32 மையங்களில் நடந்த இலக்கிய திறனறி தேர்வு
/
32 மையங்களில் நடந்த இலக்கிய திறனறி தேர்வு
ADDED : அக் 12, 2025 01:59 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நடந்த இலக்கிய திறனறிவு தேர்வில், 393 பேர் பங்கேற்கவில்லை. 32 மையங்களில் நடந்த தேர்வில், 10,356 பேர் பங்கேற்றனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் விதமாக, பிளஸ் 1 மாணவ---மாணவிகளுக்கு, தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 32 மையங்களில் தேர்வு நடந்தது.
தேர்வெழுத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த, 10,356 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 393 பேர் பங்கேற்கவில்லை. 9,963 பேர் மட்டுமே எழுதினர். ஓ.எம்.ஆர்., விடைத்தாள் முறையில் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை தேர்வு நடந்தது.