நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,சேலம் மாவட்டம் கொளத்துார், சின்ன தண்டாவை சேர்ந்த மகாதேவன் மகள் பெரியநாயகி, 15; இவரின் மனைவி சசிகலாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், 15 நாட்களுக்கு முன் தன் தாய் வீடான ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அன்னை சத்யா நகருக்கு சென்று விட்டார்.
தாயை பார்க்க கடந்த, 8ல் பெரிய நாயகி ஈரோடு வந்தார். இந்நிலையில் பெரிய நாயகி வீட்டில் மாயமாகி விட்டார். சசிகலா புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.* கோபி அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர், பவித்ரா, 19; கல்லுாரி மாணவி, கடந்த, 12ம் தேதி கல்லுாரி சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை காளியப்பன் புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்

