/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அபிராமி கிட்னி கேரில் கல்லீரல் மாற்று ஆபரேஷன்
/
அபிராமி கிட்னி கேரில் கல்லீரல் மாற்று ஆபரேஷன்
ADDED : மார் 17, 2024 02:36 PM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 20 வயது வாலிபர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய, குடும்பத்தினர் சம்மதித்தனர். இதன்படி அவரிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரல், ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு, அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கல்லீரல் சிகிச்சை பெற்று வந்த, 58 வயது நபருக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கல்லீரல் பொருத்தப்பட்டது.
அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் டாக்டர்கள் சரவணன், கார்த்திக் மதிவாணன் தலைமையிலான குழுவினர், அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். 12 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, கல்லீரல் பொருத்தப்பட்ட நோயாளி ஆரோக்கியத்துடன் உள்ளதாக, டாக்டர் சரவணன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரம் பெற்ற ஒரே மருத்துவமனை அபிராமி கிட்னி கேர். மருத்துவமனையில் மூன்றாவது முறையாக கல்லீரல் அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும், மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

