தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு மாவட்டத்தில் டிச., வரை கால்நடை கணக்கெடுப்பு பணி

ஈரோடு மாவட்டத்தில் டிச., வரை கால்நடை கணக்கெடுப்பு பணி

ஈரோடு மாவட்டத்தில் டிச., வரை கால்நடை கணக்கெடுப்பு பணி


ADDED : அக் 24, 2024 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு மாவட்டத்தில் டிச., வரை

கால்நடை கணக்கெடுப்பு பணி

ஈரோடு, அக். 24-

ஈரோடு மாவட்டத்தில் தற்போது முதல் வரும் டிச., வரை கால்நடை கணக்கெடு ப்பு பணிகள் நடக்க உள்ளது.

கணக்கெடுப்பு பணியில் கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை ஆய்வாளர்கள், பணி ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர்கள், இளங்கலை அறிவியல் பட்டப்

படிப்பு முடித்தோர், தனியார் செயல்முறை கருவூட்டாளர்கள் ஈடுபடுகின்றனர். ஒரு கணக்கெடுப்பாளருக்கு கிராம பகுதியில், 4,000 குடியிருப்புகள், நகர பகுதியில், 5,000 குடியிருப்புகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 246 கணக்கெடுப்பாளர்கள், 55 மேற்பார்வையாளர்கள், ஒரு கூர்ந்தாய்வாளர் கணக்கெடுப்பு பணி செய்கின்றனர். கால்நடை வளர்ப்போர், விவசாயிகள், தங்களது கால்நடை விபரத்தை கணக்கெடுப்பாளரிடம் சரியான முறையில் தெரிவிக்க வேண்டும். பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு, நாய், கோழி, பன்றி, குதிரை, இதர கால்நடைகள் விபரம் கணக்கெடுக்கப்படும். இதன் மூலம் கால்நடைகளுக்கான மருந்துகள், தடுப்பூசிகள் வழங்கவும், கால்நடை பெருக்கம், கால்நடை தீவன உற்பத்தி குறித்து அரசு திட்டமிடும். தேவையான நிதியை பெற்று, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். கணக்கெடுப்பில் கால்நடைகளுடன், பண்ணை உபகரணங்கள் விபரமும் சேகரிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us