ADDED : ஆக 10, 2025 01:02 AM
ஈரோடு, ஈரோடு அருகே, கிளாம்பாடி சோளங்கா பாளையம் பள்ளர் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி, 51. இவர் மனைவி வசந்தி, 51, பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில், துப்புரவு பணியாளராக பணிபுரிகிறார். பழனிசாமி, சுமை துாக்கும் தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சாலை புதுாரில் மூட்டை துாக்கி விட்டு, மது அருந்திய பின் அங்குள்ள, குமார் அரிசி மண்டியில் படுத்து துாங்குவது வழக்கம்.
கடந்த 7ம் தேதி இரவு வழக்கம் போல் இரவு சாப்பிட்டு விட்டு துாங்கினார். மறுநாள் காலை அரிசி மண்டி கடை உரிமையாளர் எழுப்பியபோது பழனி சாமி எழவில்லை. வசந்தி, உறவினருடன் சென்று பார்த்த போது பழனிசாமி பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்தார். கருர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.