சங்க அங்கீகார தேர்தலை நடத்தக்கோரி சுமை துாக்குவோர் ஆர்ப்பாட்டம்
சங்க அங்கீகார தேர்தலை நடத்தக்கோரி சுமை துாக்குவோர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 05, 2026 06:32 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாணிக்கம்பாளையம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்,
டி.என்.சி.எஸ்.சி., சுமை துாக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம்
சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ராஜூ தலைமை
வகித்தார். மாவட்ட பொருளாளர் பழனிசாமி, மாவட்ட இணை தலைவர் அழகேசன்
ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சங்க அங்கீகார தேர்தலை
உடனே நடத்த வேண்டும். வருகை பதிவேட்டில் தொழிலாளர்களின் பெயர்களை
சேர்க்க வேண்டும். பச்சை அட்டையை, 2022ம் ஆண்டு முதல் தேதியிட்டு வழங்க
வேண்டும். கடந்த, 2025 ஜூலை, 12 முதல் நிலுவையில் உள்ள கூலியை வழங்க
வேண்டும். தொழிலாளர்களின் ஆதார் இணைப்பை சரி செய்ய வேண்டும் என்ற
கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை துாக்குவோர் ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
