ADDED : ஏப் 28, 2024 03:56 AM
உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நடந்தது. மொத்தம், 1,690 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ கருப்பு ரகம், 117.09 ரூபாய் முதல், 147.69 ரூபாய்; சிவப்பு ரக எள், 115.59 ரூபாய் முதல், 148.88 ரூபாய்; வெள்ளை எள், 137.10 ரூபாய் முதல், 142.43 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 1.26 லட்சம் கிலோ எள், 1.77 கோடி ரூபாய்க்கு விற்றது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 12,793 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய், 24.88 ரூபாய் முதல், 34.99 ரூபாய் வரை, 4,767 கிலோ தேங்காய், 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்தில், 30 கிலோ எடை கொண்ட, 2,800 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,250 ரூபாய் முதல், 1,310 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. உருண்டை வெல்லம், 3,300 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,370 ரூபாய் முதல், 1,450 ரூபாய்; அச்சு வெல்லம், 400 மூட்டைகள் வரத்தாகி ஒரு மூட்டை, 1,300 ரூபாய் முதல், 1,350 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் நாட்டு சர்க்கரை, வெல்லம் கூடுதலாக வரத்தானது. அதேசமயம் நாட்டு சர்க்கரை மூட்டைக்கு, 60 ரூபாய், உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 90 ரூபாய் விலை உயர்ந்தது. அச்சு வெல்லம் மூட்டைக்கு, 30 ரூபாய் விலை குறைந்தது.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 3,248 மூட்டைகளில், 1.53 லட்சம் கிலோ கொப்பரை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 95.97 ரூபாய் முதல் 106 ரூபாய்; இரண்டாம் தரம், ௬௦ ரூபாய் முதல் ௯௭ ரூபாய் வரை, 1.48 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 18 ரூபாய், நேந்திரன், 26 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 460, தேன்வாழை, 520, செவ்வாழை, 960, ரஸ்த்தாளி, 480, பச்சைநாடான், 370, ரொபஸ்டா, 290, மொந்தன், 200 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 5,270 வாழைத்தார்களும், 6.24 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய் குறைந்தபட்சம், எட்டு ரூபாய்க்கும், அதிகபட்சம், 16 ரூபாய்க்கும் விற்பனையானது.

