ADDED : டிச 25, 2024 01:40 AM
உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. தேங்காய், 5,738 காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ, 30.89 ரூபாய் முதல் 51.05 ரூபாய்க்கு ஏலம் போனது. கொப்பரை தேங்காய், 235 மூட்டைகள் வரத்தாகின. ஒரு கிலோ முதல்தரம், 12௮ ரூபாய் முதல் 143.19 ரூபாய்; இரண்டாம் தரம், ௯௭ ரூபாய் முதல் 13௭ ரூபாய் வரை விற்றது. எள் ஏலத்துக்கு, 217 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். சிவப்பு எள் கிலோ, 123.19 ரூபாய் முதல் 140.49 ரூபாய்; வெள்ளை எள் கிலோ, 123.19 ரூபாய் முதல் 140.49 ரூபாய் வரை விற்றது. அனைத்தும் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் முன்னிலையில், 35.௪6 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், வேளாண் விளைபொருட்கள் ஏலம் நேற்று நடந்தது. இதில் தேங்காய், 6,௦௦௦ காய் வரத்தானது. ஒரு கிலோ, 37.46 - 48 ரூபாய்; தேங்காய் பருப்பு, 43 மூட்டை வரத்தாகி ஒரு கிலோ, 114.91 - 142.91 ரூபாய்; எள், 13 மூட்டை வரத்தாகி கிலோ, 106.91 - 151.69 ரூபாய்; மக்காச்சோளம், 25 மூட்டை வரத்தாகி, 37 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல் பச்சைப்பயிறு இரண்டு மூட்டை, தட்டைப்பயிறு ஏழு மூட்டை, உளுந்து, 14 மூட்டை வரத்தானது.
* ஈரோட்டில் நேற்று நடந்த ஜவுளி சந்தையில் ஏராளமான கடைகள் போடப்பட்டிருந்தன. கடந்த இரு வாரமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விற்பனை ஓரளவு நடந்தது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநில வியாபாரிகள், கடைக்காரர்கள் மொத்த ஜவுளிகளை வாங்கி சென்றனர். இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதால், சில்லறை விற்பனை களை கட்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
* அம்மாபேட்டை அருகே பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 2,402 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 13 ரூபாய் முதல் 25 ரூபாய்; 24 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி ஒரு கிலோ, 106-142 ரூபாய்; ௧62 மூட்டை நிலக்கடலை வரத்தாகி ஒரு கிலோ, 64-72 ரூபாய்; ஆறு மூட்டை மக்காச்சோளம் வரத்தாகி ஒரு கிலோ, 23 ரூபாய்; இரண்டு முட்டை உளுந்து வரத்தாகி கிலோ, 58-73 ரூபாய்க்கும் விற்பனையானது.

