தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/உள்ளூர் வர்த்தக செய்திகள்: ஈரோடு

உள்ளூர் வர்த்தக செய்திகள்: ஈரோடு

உள்ளூர் வர்த்தக செய்திகள்: ஈரோடு


ADDED : மார் 15, 2026 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 07:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை பொருள் உற்-பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 4,258 மூட்டைகளில், 2.02 லட்சம் கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 145.70 ரூபாய் முதல் 155.91 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 36.99 ரூபாய் முதல் 150.50 ரூபாய் வரை, 2.98 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 10,922 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ பச்சை தேங்காய், 36.99 - 44.99 ரூபாய், கசங்கல் காய், 46.97 - 53.19 ரூபாய் என, 3,266 கிலோ தேங்காய், 1.55 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 150 மூட்டை வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 100.09 - 168.39 ரூபாய், சிவப்பு ரகம், 96.62 - 128.69 ரூபாய், வெள்ளை ரகம், 110.90 - 112.90 ரூபாய் என, 11,110 கிலோ எள், 16 லட்சத்து, 53,563 ரூபாய்க்கு விலை போனது.

* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 1,600 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை சர்க்கரை, 1,240 - 1,370 ரூபாய்க்கு விற்பனையானது.

உருண்டை வெல்லம், 2,700 மூட்டைகள் வரத்தாகி ஒரு மூட்டை, 1,280 - 1,380 ரூபாய்க்கு விலை போனது. அச்சு வெல்லம், 210 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,450 - 1,470 ரூபாய்க்கான விலையில் விற்பனையானது. கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம், 30 ரூபாய் குறைந்தது.

* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. இதில், 9,398 தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 51.55 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 35.05 ரூபாய் என, 1.78 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல், 830 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. கிலோ அதிகபட்சம், 152.65 ரூபாய், குறைந்த-பட்சம், 103 ரூபாய்க்கும் ஏலம் போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us