ADDED : ஏப் 06, 2026 05:52 AM
*
ஈரோடு மாவட்டம் பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்,
எள் ஏலம் நேற்று நடந்தது. வெள்ளை எள் கிலோ, 127 - 136 ரூபாய், கருப்பு
எள் கிலோ, 138 - 163 ரூபாய், சிகப்பு எள் கிலோ, 125 - 134 ரூபாய் என, 172
மூட்டை எள், 18.64 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* எழுமாத்துார்
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1.70 லட்சம்
தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 46.69 -
48.25 ரூபாய், பச்சை தேங்காய், 34.29 - 43.99 ரூபாய், தண்ணீர் வற்றிய
காய், 62.75 ரூபாய் என, 56,733 கிலோ தேங்காய், 25.95 லட்சம் ரூபாய்க்கு
விற்றது.
* அந்தியூர் வாரச்சந்தையில் இரு நாட்கள் கூடிய கால்நடை
சந்தைக்கு, 1,500க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டன.
ஜெர்சி இன மாடுகள், 2,000 ரூபாய் முதல் 44 ஆயிரம் ரூபாய், நாட்டு மாடுகள்,
3,000 ரூபாய் முதல் 51 ஆயிரம் ரூபாய், மலை மாடுகள், 3,000 ரூபாய் முதல் 50
ஆயிரம் ரூபாய், எருமை, 3,000 ரூபாய் முதல் 53 ஆயிரம் ரூபாய் வரை விலை
போனது.
* அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடந்த
ஏலத்தில், செவ்வாழை தார், 130-650 ரூபாய், தேன்வாழை தார் 90-540க்கும்,
பூவன் தார் 120-450க்கும், ரஸ்தாளி தார் 240-720க்கும், மொந்தன் தார்
30-220க்கும், ஜி-9 தார் 120-500க்கும், பச்சை நாடன் தார் 180-420
ரூபாய்க்கும் ஏலம் போனது. கதளி கிலோ, 12-26 ரூபாய், நேந்திரன் கிலோ,
10-16 ரூபாய் என, 3,800 வாழைத்தார், 6.97 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
