ADDED : மார் 01, 2024 02:08 AM
*
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்,
நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. இதில் பச்சை நிலக்கடலை, 76 மூட்டை
வரத்தாகி, கிலோ, 23.19 - 43 ரூபாய் வரை, 1.27 லட்சம் ரூபாய்க்கு
விற்றது. காய்ந்த நிலக்கடலை, 239 மூட்டை வரத்தாகி, கிலோ, 65.66 -
73.89 ரூபாய் வரை, 5.49 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
* கோபி வேளாண்மை
உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம்
நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில் கதளி ஒரு கிலோ, 15 ரூபாய்,
நேந்திரன், 17 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 380, தேன்வாழை, 450,
செவ்வாழை, 600, ரஸ்த்தாளி, 430, பச்சைநாடான், 310, ரொபஸ்டா, 280,
மொந்தன், 240 ரூபாய்க்கும் விற்பனையானது. விற்பனைக்கு விவசாயிகள்
கொண்டு வந்த, 7,280 வாழைத்தார்களும், 7.63 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
*
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம்
நடந்தது. மொத்தம், 18 மூட்டை வந்தது. ஒரு கிலோ, 74.65 ரூபாய் முதல்,
81.85 ரூபாய் வரை ஏலம் போனது.
* பெருந்துறை வேளாண்மை பொருள்
உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று
நடந்தது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 2,681
மூட்டைகளில், 1.27 லட்சம் கிலோ கொப்பரை கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு
கிலோ, 79.97 ரூபாய் முதல், 86.42 ரூபாய்; இரண்டாம் தரம், 25 ரூபாய் முதல்,
80.89 ரூபாய் வரை, 1.02 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
