ADDED : மார் 18, 2024 03:07 AM
* ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், எள் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 713 மூட்டை வரத்தானது. இதில் கறுப்பு ரகம் கிலோ, 116.70 ரூபாய் முதல், 134.42 ரூபாய்; சிவப்பு ரகம், 108.09 ரூபாய் முதல், 133.10 ரூபாய் வரை, 53.20 டன் எள், 67.௬௧ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* அந்தியூர் அருகே புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில், வாழை விற்பனை நடந்தது. கதலி ரக வாழை கிலோ, 14 ரூபாய்; நேந்திரம் 28 ரூபாய், பூவன் தார், 350 ரூபாய்,
செவ்வாழை தார், 600 ரூபாய், ரஸ்தாளி தார், 470 ரூபாய், மொந்தன் தார், 100 ரூபாய்க்கும் விற்றது. வரத்தான, 4,௦௦௦ வாழைத்தார், 6.11 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு, 20 டன் முருங்கை நேற்று வரத்தானது. இதில் மர முருங்கை கிலோ, 10 ரூபாய்; செடி முருங்கை, 15 ரூபாய்; கரும்பு முருங்கை, 20 ரூபாய்க்கும் விற்பனையானது.

