தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : ஏப் 21, 2025 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2025 07:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடந்த ஏலத்தில், கதலி ரகம் ஒரு கிலோ, 20 முதல் 47 ரூபாய்; நேந்திரம் கிலோ, 26 ரூபாய் முதல் 45 ரூபாய்; பூவன் தார், 480 ரூபாய்; செவ்வாழை தார், 880 ரூபாய்; ரஸ்தாலி, 600 ரூபாய்; ஜி--9 தார், 420 ரூபாய்; தேன்வாழை தார், 550 ரூபாய்; மொந்தன் தார், 300 ரூபாய் வரை விற்றது. மொத்தம், 4,100 வாழைத்தார் வரத்தாகி, 5.64 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

* ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, 15 டன் மீன் மட்டுமே நேற்று வரத்தானது. இதனால் விலை கிலோவுக்கு, 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அதிகரித்தது. மார்க்கெட்டில் விற்பனையான மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): சால்மோன்--900, கொடுவா-900, வெள்ளை வாவல்-1,200, கருப்பு வாவல்-900, வஞ்சரம்-1,100, மயில் மீன்-800, கிளி மீன்-- 700, முரல்-450, சங்கரா-400, விள மீன்-- 550, தேங்காய் பாறை-550, இறால்-800, சின்ன இறால்-500, ப்ளூ நண்டு-700, சின்ன ப்ளூ நண்டு-400, அயிலை-300, மத்தி-250, டுயானா-700, திருக்கை-350.

* அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் இரு நாட்கள் கூடிய கால்நடை சந்தையில், ௫,௦௦௦க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டி, ஜெர்சி, மலை மற்றும் காங்கேயம் இன மாடுகள், எருமை மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதில் மாட்டினங்கள், ௩,௦௦௦ ரூபாய் முதல் 49 ஆயிரம் ரூபாய்; எருமை, ௩,௦௦௦ ரூபாய் முதல் 55 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. காங்கேயம் மாடு ஒரு ஜோடி, 1.5௦ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இரு நாட்களில் நடந்தந் சந்தையில், 1.15 கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்றதாக வியாபாரிகள் கூறினர்.

* ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது. விடுமுறை தினமான நேற்று ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 34.53 டன் காய்கனி வரத்தாகி விற்றது. அனைத்து உழவர் சந்தைகளுக்கும், 75.12 டன் காய்கனி வரத்தாகி, 25.௯௩ லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.

* பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நடந்தது. வெள்ளை எள், கிலோ, 125.39 - 145.22 ரூபாய், சிகப்பு எள், 129.69 - 143.39 ரூபாய், கருப்பு எள், 145 - 18௮ ரூபாய் என, 292 மூட்டை வரத்தாகி, 32.89 லட்சம் ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு ஏழு மூட்டை வரத்தாகி கிலோ, 133.09 - 177.06 ரூபாய்; தேங்காய், 712 காய்கள் வரத்தாகி, ஒரு காய், 27.21 - 16.52 ரூபாய்; தட்டைப்பயறு ஒரு மூட்டை வரத்தாகி, 1,740 ரூபாய்க்கு விற்றது.

* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஜாதி முல்லை கிலோ, 1,000 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை,740, முல்லை, 180, காக்கடா, 325, செண்டுமல்லி, 40, கோழிகொண்டை,60, கனகாம்பரம்,500, சம்பங்கி,30, அரளி,40, துளசி,60, செவ்வந்தி,220 ரூபாய்க்கும் விற்பனையானது.

* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, 4 டன் முருங்கை நேற்று வரத்தானது. செடி முருங்கை கிலோ, 9 ரூபாய், மர முருங்கை, 10 ரூபாய், கருப்பு முருங்கை, ௩0 ரூபாய்க்கும் விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us