ADDED : மே 18, 2025 05:48 AM
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 3,204 மூட்டைகளில், ௧.௩௦ லட்சம் கிலோ கொப்பரை கொண்டு வந்தனர். முதல் தர கொப்பரை ஒரு கிலோ, 179.10 ரூபாய் முதல் 191.08 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 105.11 ரூபாய் முதல் 186.89 ரூபாய் வரை, ௨.௨௩ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி கிலோ, 45 ரூபாய், நேந்திரன், 46 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 630, செவ்வாழை, 1,200, தேன்வாழை, 700, ரஸ்த்தாளி, 600, மொந்தன், 410, ரொபஸ்டா, 400, பச்சைநாடான், 430 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 4,000 வாழைத்தார்களும், 9.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 12 ரூபாய் முதல் 27 ரூபாய் வரை, வரத்தான, 12 ஆயிரத்து, 600 தேங்காய், 2.40 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, ஒரே விலையாக, 2,880 ரூபாய்க்கு ஏலம்போனது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,730 ரூபாய் முதல், 2,790 ரூபாய் வரை ஏலம் போனது. வரத்தான, 1,255 நாட்டு சர்க்கரை மூட்டைகளை, 35 லட்சம் ரூபாய்க்கு, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்தது.
திருப்பூர் மாவட்டம் முத்துார் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூட மையத்தில் நேற்று எள் ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 28 விவசாயிகள், 51 மூட்டைகளில், 4,309 கிலோ எள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ அதிகபட்சம், 126.49 ரூபாய்; குறைந்தபட்சம், 86.36 ரூபாய் என, 5.௧௪ லட்சம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல் கொப்பரை ஏலத்துக்கு, ௨,938 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 190.10 ரூபாய், குறைந்தபட்சம், 115 ரூபாய்க்கும் ஏலம் போனது.