ADDED : ஜூலை 20, 2025 05:21 AM
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 26,280 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ பச்சை தேங்காய், 50.90 முதல், 66.31 ரூபாய்; கலங்கல் தேங்காய், 62.47 முதல், 71.43 ரூபாய் வரை, 10,978 கிலோ தேங்காய், 7.26 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு(கிலோவில்), துவரம் பருப்பு, குண்டு உளுந்து, பச்சை பயிர், தட்டைப்பயிர், வெந்தயம், தலா 120 ரூபாய்க்கு விற்பனையானது. பாசிப்பருப்பு, 130, கொள்ளு, 80, கடலைப்பருப்பு, 100, சீரகம், 360, கடுகு, 110, பொட்டுக்கடலை, 110, கருப்பு சுண்டல், 90, வெள்ளை சுண்டல், 120, வரமிளகாய், 180, பூண்டு, 120 முதல், 180 ரூபாய் வரையும், மிளகு, 780 ரூபாய்க்கும் விற்பனையானது.
சித்தோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 52 மூட்டை வந்தது. குவிண்டால், 10,699 முதல், 12,712 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 3,259 கிலோ மஞ்சள், 3.57 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடையில், 2,100 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,200 முதல், 1,400 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 2,400 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,380 முதல், 1,480 ரூபாய்; அச்சு வெல்லம், 300 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,400 முதல், 1,430 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 50 ரூபாய் விலை உயர்ந்தது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 64 ரூபாய்க்கும், நேந்திரன், 28 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை, 810, தேன்வாழை, 700, பூவன், 680, ரஸ்த்தாளி, 670, மொந்தன், 460, ரொபஸ்டா, 560, பச்சைநாடான், 490 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 4,210 வாழைத்தார், 9.37 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 15 ரூபாய் முதல் 44 ரூபாய் வரை, 20,500 தேங்காய், 6.25 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 20,150 தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 72.65 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 55.10 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதேபோல் கொப்பரை ஏலத்துக்கு, 2,199 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 241.10 ரூபாய், குறைந்தபட்சம், 150.20 ரூபாய்க்கும் ஏலம் போனது.