ADDED : ஆக 24, 2025 01:26 AM
* ஈரோடு மாவட்டம் பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், பாக்கு ஏம் நடந்தது. காய்ந்த பாக்கு கிலோ, 178 - 190 ரூபாய்; சாலி பாக்கு கிலோ, 330 - 416 ரூபாய்; பாக்கு பழம், 80-90 ரூபாய்; பாக்கு பச்சை காய் கிலோ, 50.20-60.50 ரூபாய்க்கும் விற்றது.
* கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. நாட்டு சர்க்கரை முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டையாக, 2,940 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை விற்றது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,730 ரூபாய் முதல், 2,790 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 1,374 நாட்டு சர்க்கரை மூட்டைகளும், 38.86 லட்சம் ரூபாய்க்கு விற்றது. அதேபோல் உருண்டை வெல்லம், 40 மூட்டைகளில் (30 கிலோ) வரத்தானது. ஒரு மூட்டை, 1,620 ரூபாய் விலையில், அனைத்து மூட்டைகளும், 64 ஆயிரத்து, 800 ரூபாய்க்கு விற்பனையானது. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 39.51 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்தது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 27,577 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ பச்சை தேங்காய், 54.17 முதல், 60.49 ரூபாய்; கசங்கல் தேங்காய், 5௬ ரூபாய் முதல், 65.69 ரூபாய் வரை, 12,285 கிலோ எடை தேங்காய், 7.௩௩ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
* கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று நடந்தது. துவரம் பருப்பு (கிலோவில்) குண்டு உளுந்து, பச்சை பயிர், பொட்டுக்கடலை, தட்டைப்பயிர், வெள்ளை சுண்டல் என தலா 110 ரூபாய்க்கு விற்பனையானது. தவிர, பாசிப்பருப்பு, 120, கடலைப்பருப்பு, 100, கொள்ளு, 70, மல்லி, 120, சீரகம், 360, வெந்தயம், 100, வரமிளகாய், 160, பூண்டு, 100 ரூபாய் முதல், 160 ரூபாய்க்கும், கருப்பு சுண்டல், 90, மிளகு, 750, கடுகு, 100, புளி, 160 ரூபாய்க்கும் விற்பனையானது.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 5,291 மூட்டைகளில், ௨.௪௭ லட்சம் கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 190.60 ரூபாய் முதல் 218 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 25.89 ரூபாய் முதல் 21௩ ரூபாய் வரை, ஐந்து கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, ௧5,224 காய் வந்தது. முதல் தரம் கிலோ, 77.75 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 52.05 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதேபோல் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 717 கிலோ வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 211.70 ரூபாய்; குறைந்தபட்சம், 148.40 ரூபாய்க்கும் ஏலம் போனது.