ADDED : செப் 24, 2025 01:11 AM
* ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 335 மூட்டை நிலக்கடலை வரத்தனாது. ஒரு கிலோ, 57.20 - 73.80 ரூபாய் வரை, 10,216 கிலோ நிலக்கடலை, 6.௮௦ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 400 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 228.50 - 232.11 ரூபாய்; இரண்டாம் தரம், 108.99 - 224.09 ரூபாய் வரை, 16,765 கிலோ கொப்பரை, 36.௩௧ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 6,501 தேங்காய் வரத்தாகி, ஒரு காய், 54 ரூபாய் முதல் 68 ரூபாய்; 49 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 186 ரூபாய் முதல் 224 ரூபாய்; 838 மூட்டை பருத்தி வரத்தாகி, கிலோ, 74 ரூபாய் முதல் 79 ரூபாய் வரை, 280 குவிண்டால் வேளாண் விளை பொருட்கள், 23.48 லட்சம் ரூபாய்க்கு விற்றது.