தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : செப் 28, 2025 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2025 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், ௩,540 மூட்டைகளில், ௧.௬௮ லட்சம் கிலோ கொப்பரை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 210.37 ரூபாய் முதல் 228.19 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 25.55 ரூபாய் முதல் 219 ரூபாய் வரை, ௩.௬௦ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 22,686 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ பச்சை தேங்காய், 41.25 - 64.86 ரூபாய், கசங்கல் தேங்காய், 63.90 - 71.99 ரூபாய் என, 10,006 கிலோ தேங்காய், 6.48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

* ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 2,200 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை நாட்டு சர்க்கரை, 1,380 - 1,408 ரூபாய்க்கு விலை போனது. உருண்டை வெல்லம், 3,300 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,480 - 1,560 ரூபாய்; அச்சு வெல்லம், 250 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,410 - 1,440 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 60 ரூபாய் விலை உயர்ந்தது.

* புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 45 கிலோ எடையில், 293 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நிலக்கடலை காய்ந்தது முதல் தரம் கிலோ, 64 ரூபாய் முதல் 67.10 ரூபாய்; இரண்டாம் ரகம், 58 ரூபாய் முதல் 63 ரூபாய் வரை, ௬.59 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

* கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ), குண்டு உளுந்து, பாசிப்பருப்பு என தலா, 120 ரூபாய்க்கு விற்பனையானது. பச்சை பயிர், 110, தட்டைப்பயிர், 100, கொள்ளு, 80, கடுகு, 100, சீரகம், 340, வெந்தயம், 90, பொட்டுக்கடலை, 110, கருப்பு சுண்டல், 80, வெள்ளை சுண்டல், 90, மிளகு, 800, வரமிளகாய், 160, புளி, 200, பூண்டு, 50 முதல் 200 ரூபாய் வரை விற்பனையானது.

* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்கு முறை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 12,345 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 69.10 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 54.20 ரூபாய் என, 4.7 டன் தேங்காய், மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 834 கிலோ வரத்தாகி ஒரு கிலோ, 132.20 ரூபாய் முதல் 223.10 ரூபாய் வரை ஏலம் போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us