ADDED : நவ 01, 2025 12:46 AM
* ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஒரு கிலோ, ௬௩ ரூபாய் முதல் 65 ரூபாய் வரை, 532 கிலோ தேங்காய், 34 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல் தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 5,000 காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 68 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை, 23.86 குவிண்டால் தேங்காய், 1.67 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த எள் ஏலத்துக்கு, 94 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ கருப்பு ரகம், 140.11 - 142.88 ரூபாய், சிவப்பு ரகம், 78.99 - 113.89 ரூபாய் வரை, 6,903 கிலோ எள், 7.௦௪ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 50 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 213.69 - 220.56 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 156.60 - 205.99 ரூபாய் வரை, 1,479 கிலோ கொப்பரை தேங்காய், 2.௭௭ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

