தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : நவ 30, 2025 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 9,094 தேங்காய் வரத்தானது. பச்சை தேங்காய் கிலோ, 42.30 - 52 ரூபாய், கசங்கல் தேங்காய், 54.99 - 57.16 ரூபாய் என, 3,424 கிலோ தேங்காய், 1.81 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

* புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ மல்லிகை பூ, 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை விற்பனையானது. வரத்து குறைவு மற்றும் கார்த்திகை மாத முகூர்த்த சீசனால் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ, 6,640 ரூபாயாக உயர்ந்தது. இதேபோல் முல்லை கிலோ, 2,000 ரூபாய், காக்கடா, 2,000 ரூபாய், கோழிக்கொண்டை, 140 ரூபாய், சம்பங்கி கிலோ, 100 ரூபாய்க்கும் விற்பனையானது.

* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 129 மூட்டை எள் வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 9௩ - 140.90 ரூபாய், சிவப்பு ரக எள், 7௧ - 116.89 ரூபாய், வெள்ளை ரகம், 96.90 - 120.06 ரூபாய் விலையில், 9,565 கிலோ எள், 11 லட்சத்து, 45,214 ரூபாய்க்கு விற்றது.

* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், ௩,௦81 மூட்டைகளில், ௧.44 லட்சம் கிலோ வரத்தானது. முதல் தரம் கிலோ, 166.65 ரூபாய் முதல் 19௭ ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 32.96 ரூபாய் முதல் 211.22 ரூபாய் என, ௨.66 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

* புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், 45 கிலோ எடையில், 211 காய்ந்த நிலக்கடலை மூட்டை கொண்டு வந்தனர். காய்ந்தது முதல் தரம் கிலோ, 69 ரூபாய் முதல் 73.40 ரூபாய்; இரண்டாம் ரகம், 65 ரூபாய் முதல் 68 ரூபாய் வரை, 5.53 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

* கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. இரண்டாம் தரம் (மீடியம்), 60 கிலோ மூட்டை, 2,745 ரூபாய் முதல், 2,820 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 1,414 நாட்டு சர்க்கரை மூட்டைகளை, 39.05 லட்சம் ரூபாய்க்கு, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்தது.

* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் கிலோ, 3,500 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ, 6,640 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் முல்லை பூ, 2,000, காக்கடா, 2,000, செண்டுமல்லி, 70, கோழி கொண்டை, 140, ஜாதி முல்லை, 1,400, கனகாம்பரம், 1,130, சம்பங்கி, 100, அரளி, 220, துளசி, 50, செவ்வந்தி, 160 ரூபாய்க்கும் விற்பனையானது.

* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி கிலோ, 45 ரூபாய், நேந்திரன், 30 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 860, தேன்வாழை, 440, பூவன், 410, ரஸ்த்தாளி, 630, மொந்தன், 240, ரொபஸ்டா, 400, பச்சைநாடான், 420 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 5,730 வாழைத்தார்கள், 9.28 லட்சம் ரூபாய்க்கு விற்றது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 17 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை, வரத்தான, 14 ஆயிரத்து, 470 காய்களும், 4.24 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us