ADDED : டிச 19, 2025 07:56 AM
* ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 50 ரூபாய், நேந்திரன், 25 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 1,110 ரூபாய், தேன்வாழை, 560, பூவன், 500, ரஸ்த்தாளி, 610, மொந்தன், 360, ரொபஸ்டா, 400, பச்சைநாடான், 470 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 3,710 வாழைத்தார்களும், 8.94 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ, 3,120 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை பூ-1,200, காக்கடா-1,250, செண்டுமல்லி-60, கோழிக்கொண்டை-85, ஜாதி முல்லை-1,250, கனகாம்பரம்-600, சம்பங்கி-160, அரளி-270, துளசி-50, செவ்வந்தி-140 ரூபாய்க்கும் விற்பனையானது.
* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில விவசாயிகள், வியாபாரிகள் வழக்கமான எண்ணிக்கையில் வந்தனர். 6,000 முதல், 23,000 ரூபாய்க்கு, 50 கன்றுகள், 23,000 முதல், 70,000 ரூபாய்க்கான விலையில், 200 எருமை மாடுகள், 23,000 முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 250 பசு மாடுகள், 60,000 ரூபாய்க்கும் மேலான விலையில் முற்றிலுமான கலப்பின மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. மழை, குளிர் காலமாக உள்ளதால், பசுந்தீவனம் அதிகம் கிடைப்பதால், கன்றுகள், குறைந்த வயதுடைய மாடுகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டினர்.
* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 108 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 72.69 - 82.80 ரூபாய் என, 3,409 கிலோ நிலக்கடலை, 2.65 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
* புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை புதன் மற்றும் வியாழக்கிழமை நடந்தது. நேற்று கூடிய வாரச்சந்தைக்கு, 150 வெள்ளாடு, 100 செம்மறி ஆடு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஐந்து முதல் 10 கிலோ வரையிலான வெள்ளாடு, 3,500 ரூபாய் முதல் 7,000 ரூபாய்; 10 கிலோ செம்மறி ஆடு, 6,000 ரூபாய் வரையும் விலை போனது. மார்கழி மாதம் மற்றும் சபரிலை சீசன் என்பதால், ஆடுகள் வரத்து பாதியானது. விற்பனையும் சரிந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

