ADDED : டிச 20, 2025 07:18 AM
* ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 21 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 169-220.79 ரூபாய், இரண்டாம் தரம், 90.10 - 170.69 ரூபாய் என, 347 கிலோ கொப்பரை, 55,789 ரூபாய்க்கு விற்பனையானது.
* கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில் ஒரு கிலோ, 52 ரூபாய் முதல் 53 ரூபாய் வரை, வரத்தான, 1,093 கிலோ தேங்காய், 57 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு ஏலத்தில் இரண்டாம் தரம் ஒரே விலையாக, 85 ரூபாய்க்கு விற்பனையா-னது.
* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 1,400 காய் வரத்தானது.
ஒரு கிலோ, 61.88 ரூபாய் முதல் 6௩ ரூபாய் வரை, 8 குவிண்டால், 56,799 ரூபாய்க்கு ஏலம் போனது. தேங்காய் தொட்டி அதிகபட்சமாக கிலோ, 26.10 ரூபாய்க்கு ஏலம் போனது.

