ADDED : ஜன 05, 2026 04:47 AM
* ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 2,400 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை பூ, 800, காக்கடா, 400, செண்டுமல்லி, 38, கோழிக் கொண்டை, 45, ஜாதிமுல்லை, 1,000, கனகாம்பரம், 710, சம்பங்கி, 40, அரளி, 120, துளசி, 50, செவ்வந்தி, 120 ரூபாய்க்கும் விற்பனையானது.
* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்-முதல் நிலையத்துக்கு, 450 கிலோ முருங்கை நேற்று வரத்தானது. செடி முருங்கை, மரமுருங்கை கிலோ, 150 ரூபாய், கருப்பு முருங்கை கிலோ, 200 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரம், 2 டன் வரத்தாகி ஒரு கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனையா-னது.
* அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை இரண்டு நாட்கள் நடந்தது. இதில், 3,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டன. ஜெர்சி மாடுகள், 2,000 ஆயிரம் முதல் 43 ஆயிரம் ரூபாய்; மலை மாடுகள், 3,000 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய், நாட்டு மாடு, 3,000 ரூபாய் முதல், 54 ஆயிரம் ரூபாய், எருமைகள், 3,000 ரூபாய் முதல் 56 ஆயிரம் ரூபாய் வரை விற்-றது. இரண்டு நாட்களில், 1.20 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்-தது.
