ADDED : ஜன 13, 2026 07:11 AM
* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1.10 லட்சம் தேங்காய் வரத்-தானது. ஒரு கிலோ தேங்காய், 58.95 - 53.49 ரூபாய், பச்சை தேங்காய், 50.79 - 42.43 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 66.60 ரூபாய் என, 3,855 கிலோ தேங்காய், 19.76 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* அந்தியூர் வாரச்சந்தை நேற்று நடந்தது. சந்தைக்கு, 90 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி ரக வெற்றிலை சிறியது ஒரு கட்டு, 120 ரூபாய், பெரிய கட்டு, 160 ரூபாய் முதல் 200 ரூபாய், பீடா வெற்றிலை கட்டு, 80 ரூபாய் முதல் 100 ரூபாய், செங்காம்பு கட்டு, 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை, 20 லட்சம் ரூபாய்க்கு வெற்றிலை விற்றது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 12,419 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 43-54 ரூபாய், 37 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 165-210 ரூபாய்; தட்டைபயறு கிலோ, 42 ரூபாய்; உளுந்து கிலோ, 76 ரூபாய்; நரிப்பயறு கிலோ, 112 ரூபாய்; ஆமணக்கு கிலோ, 60-85 ரூபாய்; மக்காச்சோளம் கிலோ, 20 ரூபாய்க்கும் ஏலம் போனது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று நடந்தது. கதளி கிலோ, 55 ரூபாய், நேந்திரன், 25 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாழை தார், 1,310 ரூபாய், தேன்வாழை, 680, பூவன், 700, ரஸ்த்தாளி, 610, மொந்தன், 400, ரொபஸ்டா, 420, பச்சைநாடான், 430 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 3,175 வாழைத்-தார்கள், 9.40 லட்சம் ரூபாய்க்கு விற்றன.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 4,000 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் முல்லை பூ, 2,060, காக்கடா, 1,500, செண்டுமல்லி, 25, கோழி கொண்டை, 35, ஜாதிமுல்லை, 1,250, கனகாம்பரம், 550, சம்பங்கி, 50, அரளி, 270, துளசி, 50, செவ்வந்தி, 100 ரூபாய்க்கும் விற்பனையானது.
*கோபி தாலுகா சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்-பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்-தது. தென்னங்கருப்பட்டி, 500 கிலோ வரத்தாகி, கிலோ 145 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் கிலோவுக்கு ஒரு ரூபாய் விலை கூடியது.
