ADDED : ஜன 14, 2026 07:17 AM
* ஈரோடு மாவட்டம் கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பாக்கு ஏலம் நேற்று நடந்தது. பாக்கு உலர்ந்தது (கிலோ), 186 முதல், 196 ரூபாய், பாக்கு (பழம்), 73 முதல் 76 ரூபாய், பாக்கு (பச்சைக்காய்) 57 முதல், 70 ரூபாய் என, 2,768 கிலோ, 2.94 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* அம்மாபேட்டை அருகே பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலத்துக்கு, 1,175 காய்கள் வரத்தாகி, கிலோ, 26.38 - 53.30 ரூபாய்க்கு விற்றது. நெல், 16 மூட்டை வரத்தாகி, கிலோ, 20.90 - 23.68 ரூபாய்; தேங்காய் பருப்பு, 20 மூட்டை வரத்தாகி, கிலோ, 135.19 - 182.69 ரூபாய்க்கு விற்றது.
* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 670 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தா-னது. முதல் தரம் கிலோ, 170.99 - 188.90 ரூபாய், இரண்டாம் தரம், 108-185.89 ரூபாய் என, 29,725 கிலோ, 49 லட்சத்து, 92,628 ரூபாய்க்கு விலை போனது.
* ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்றி-ரவு வரை ஜவுளி சந்தை விற்பனை நடந்தது. தமிழகத்தின் பல்-வேறு பகுதி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா பகுதி பொதுமக்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள் வந்திருந்தனர். ஆயத்த ஆடை, பனியன், ஜட்டி, நைட்டி, உள்ளாடைகளை அதிகம் வாங்கினர். தவிர துண்டு, வேட்டி, லுங்கி, பெட்ஷீட், பெட்ஸ்பிரட், தலையணை ஓரளவு விற்பனையானது.
* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 13,566 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 35 - 58.69 ரூபாய் வரை, 4,708 கிலோ தேங்காய், 2.14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய், 359 மூட்டை வரத்தாகி, முதல் தரம் கிலோ, 165.89 - 202 ரூபாய், இரண்டாம் தரம், 122-187 ரூபாய் வரை, 24.84 லட்சத்துக்கு விற்றது. எள், 58 மூட்டை வரத்தானது. மஞ்சள் ரகம் கிலோ, 105 ரூபாய் முதல் 118 ரூபாய் வரை, 4,342 கிலோ எள், 4.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை நேற்று குறைந்து காணப்பட்டது. ஒரு கிலோ, 65 ரூபாய்க்கு விற்ற தக்காளி, 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பிற காய்கறிகளின் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): பீன்ஸ்-50, அவரை-30, புடலங்காய்-40, ஊட்டி உருளை-50, தேங்காய்-50, இஞ்சி-70, மிளகாய்-60, பூசணி-50, வெண்டைக்காய்-60, மேரக்காய்-20, முட்-டைகோஸ்-30, கேரட்-50, பாகற்காய்-50.

