ADDED : பிப் 06, 2026 04:20 AM
* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 16 மூட்டை வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 20௧ ரூபாய், குறைந்தபட்சம், 142.59 ரூபாய் என, 7.55 குவிண்டால், 1.28 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
* சத்தி பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ முல்லை பூ, 1,400 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை பூ, 1,280, காக்கடா, 550, செண்டுமல்லி, 38, கோழிக்கொண்டை, 100, ஜாதி முல்லை, 1,000, கனகாம்பரம், 550, சம்பங்கி, 80, அரளி, 170, துளசி, 50, செவ்வந்தி, 200 ரூபாய்க்கும் விற்பனையானது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி கிலோ, 65 ரூபாய், நேந்திரன், 25 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழைத்தார், 1,600 ரூபாய், தேன்வாழை, 600, பூவன், 610, ரஸ்த்தாளி, 620, மொந்தன், 410, ரொபஸ்டா, 560, பச்சைநாடான், 430 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 3,500 வாழைத்தார்களும், 8.95 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில விவசாயிகள், வியாபாரிகள் வந்தனர். இதில், 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள், 22,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 200 எருமை மாடுகள், 22,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள், 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் முற்றிலும் கலப்பின மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. மொத்தம், 90 சதவீத கால்நடை விற்பனையானது.
* கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 2,039 கிலோ வரத்தானது. ஒரு கிலோ குறைந்தபட்சம், 185 ரூபாய், அதிகபட்சம், 202 ரூபாய் என, 3.53 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* புஞ்சை காளமங்கலம் உப விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,500 தேங்காய் விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 60.99 - 65.54 ரூபாய், பச்சை காய், 40 - 45.99 ரூபாய் விலையில், 506 கிலோ தேங்காய், 29,913 ரூபாய்க்கு விலை போனது.

