ADDED : பிப் 09, 2026 08:13 AM
* ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,870 வாழைத்தார் வரத்தானது. செவ்வாழை தார் அதிகபட்சம், 1,150 ரூபாய், தேன்வாழை, 700 ரூபாய், பூவன், 600 ரூபாய், ரஸ்தாளி, 720, மொந்தன், 250, ஜி-9, 420, பச்சை நாடன், 400 ரூபாய்க்கு விற்றது. கதளி கிலோ, 48-65 ரூபாய், நேந்திரன் கிலோ, 10-23 ரூபாய் என, 4.63 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூர் வாரச்சந்தையில் இரண்டு நாட்கள் கூடிய கால்நடை சந்தைக்கு, 5,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஜெர்சி இன மாடுகள், 2,000 ரூபாயிலிருந்து, 48 ஆயிரம் ரூபாய், மலை மாடுகள், 3,௦௦௦ ரூபாய் முதல் 50,000 ரூபாய், நாட்டு மாடு, 4,000 ரூபாய் முதல் 58 ஆயிரம் ரூபாய், எருமை, 3,500 ரூபாய் முதல் 56 ஆயிரம் ரூபாய் என, 1.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்கைகாய் கொள்முதல் நிலையத்துக்கு, கடந்த வாரம், 2 டன் வரத்து இருந்தது. செடி முருங்கை, மர முருங்கை கிலோ, 50 ரூபாய், கரும்பு முருங்கை, 80 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று, 2 டன் வரத்தானது. செடி முருங்கை, மரமுருங்கை கிலோ, 75 ரூபாய், கரும்பு முருங்கை, 100 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு, 20 ரூபாய் விலை கூடியது.
