ADDED : பிப் 10, 2026 08:47 AM
* ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நேற்று கூடிய வெற்றிலை சந்தைக்கு, 60 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி வெற்றிலை சிறிய கட்டு, 140 ரூபாய், பெரிய கட்டு, 170 முதல் 190 ரூபாய், பீடா வெற்றிலை கட்டு, 30 முதல் 45 ரூபாய், செங்காம்பு கட்டு, 20 முதல் 40 ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 6,074 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 45 முதல் 55 ரூபாய், 36 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 174 முதல் 206 ரூபாய், நான்கு மூட்டை உளுந்து வரத்தாகி கிலோ, 81 முதல் 83 ரூபாய், 400 மூட்டை துவரை வரத்தாகி கிலோ, 85 முதல் 95 ரூபாய், மூன்று மூட்டை ஆமணக்கு வரத்தாகி கிலோ, 82 ரூபாய், மூன்று மூட்டை அவரை வரத்தாகி கிலோ, 60 முதல் 66 ரூபாய், ஒரு மூட்டை கொள்ளு வரத்தாகி கிலோ, 52 முதல் 54 ரூபாய் என, 220 குவிண்டால் வேளாண் விளைபொருட்கள், 19.31 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* கோபி தாலுகா சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ரகங்களுக்கான ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 500 கிலோ வரத்தாகி, கிலோ 150 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் கிலோவுக்கு இரண்டு ரூபாய் விலை கூடியது. கடந்த, 34 வாரங்களாக பனங்கருப்பட்டி வரத்தாவில்லை. சீசன் துவங்கியதால், 100 கிலோ நேற்று வரத்தானது. கிலோ, 190 ரூபாய்க்கு விற்றது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ முல்லை பூ, 1,680 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை, 1,560, காக்கடா, 550, செண்டுமல்லி, 40, கோழிக்கொண்டை, 70, ஜாதிமுல்லை, 1,250, கனகாம்பரம், 680, சம்பங்கி, 30, அரளி, 130, துளசி, 50, செவ்வந்தி, 160 ரூபாய்க்கும் விற்பனையானது.
* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, ஒரு லட்சம் தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 59.10 - 64.29 ரூபாய், பச்சை தேங்காய், 48.59 - 51.49 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 82.19 ரூபாய் என, 36,966 கிலோ தேங்காய், 21 லட்சத்து, 76,899 ரூபாய்க்கு விற்பனையானது.
* திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,504 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 184.50 ரூபாய், குறைந்தபட்சம், 120 ரூபாய் என, 2.74 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
