ADDED : பிப் 11, 2026 06:05 AM
* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 1,125 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 182.39 - 185.69 ரூபாய், இரண்டாம் தரம், 114.99 - 189.39 ரூபாய் விலையில், 50,902 கிலோ கொப்பரை தேங்காய், 88 லட்சத்து, 85,384 ரூபாய்க்கு விலை போனது.
* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 17,233 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ , 42.39 - 59.69 ரூபாய் என, 4,923 கிலோ தேங்காய், 2 லட்சத்து, 77,045 ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய், 430 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 184.69 - 200.39 ரூபாய், இரண்டாம் தரம், 134.89 - 186-89 ரூபாய் விலையில், 19,499 கிலோ கொப்பரை தேங்காய், 34 லட்சத்து, 58,593 ரூபாய்க்கு விலை போனது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை கிலோ, 2,520ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை பூ, 2,000, காக்கடா, 775, செண்டுமல்லி, 40, கோழிக்கொண்டை, 80, ஜாதி முல்லை, 1,350, கனகாம்பரம், 600, சம்பங்கி, 40, அரளி, 150, துளசி, 50, செவ்வந்தி, 160 ரூபாய்க்கும் விற்பனையானது.
