ADDED : பிப் 24, 2026 10:02 AM
* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 55,000 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 45.79 - 51.72 ரூபாய், பச்சை தேங்காய், 41.59 - 43.69 ரூபாய் என, 17,666 கிலோ தேங்காய், 8.28 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 7,302 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 47-56 ரூபாய்க்கு விற்றது. 49 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 133-166 ரூபாய்; ஒரு மூட்டை நரிப்பயிறு வரத்தாகி கிலோ, 90 ரூபாய்; இரண்டு மூட்டை எள் வரத்தாகி கிலோ, 116-118 ரூபாய், 34 மூட்டை துவரை வரத்தாகி கிலோ, 65-80 ரூபாய், இரண்டு மூட்டை ஆமணக்கு வரத்தாகி கிலோ, 82-83 ரூபாய், ஒரு மூட்டை பச்சை பயறு வரத்தாகி, 67 ரூபாய், மூன்று மூட்டை கொள்ளு வரத்தாகி கிலோ, 35-41 ரூபாய்க்கும் விற்றது.* அந்தியூரில் நேற்று கூடிய வெற்றிலை சந்தைக்கு, 60 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி வெற்றிலை சிறியது கட்டு, 90 ரூபாய், பெரிய கட்டு, 120-130 ரூபாய், பீடா வெற்றிலை கட்டு, 20-40 ரூபாய், செங்காம்பு கட்டு, 5-15 ரூபாய்க்கு விற்றது. மொத்தம், எட்டு லட்சம் ரூபாய்க்கு வெற்றிலை விற்றது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ முல்லை பூ, 920 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை பூ, 740, காக்கடா-700, செண்டுமல்லி-45, கோழிக்கொண்டை-80, ஜாதிமுல்லை, 750, கனகாம்பரம், 370, சம்பங்கி, 30, அரளி, 70, துளசி, 50, செவ்வந்தி, 120 ரூபாய்க்கும் விற்பனையானது.
* சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில் கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 250 கிலோ வரத்தாகி, கிலோ 150 ரூபாய், பனங்கருப்பட்டி, 100 கிலோ வரத்தாகி, கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் பழைய விலைக்கே விற்பனையானது. வரத்தான அனைத்து கருப்பட்டி ரகங்களும், 57 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
