ADDED : பிப் 25, 2026 07:10 AM

* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,100 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 161.15 - 165.10 ரூபாய், இரண்டாம் தரம், 150.90 - 160 ரூபாய் வரை, 49,460 கிலோ கொப்பரை, 73 லட்சத்து, 92,921 ரூபாய்க்கு விற்பனையானது.
* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 17,217 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ, 40.29 - 52.69 ரூபாய் என, 5,082 கிலோ தேங்காய், 2.26 லட்சம் ரூபாய்க்கு விற்றது. கொப்பரை தேங்காய், 495 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 151.10 - 165.25 ரூபாய், இரண்டாம் தரம், 110.89 - 154.05 ரூபாய் என, 23,117 கிலோ கொப்பரை தேங்காய், 34 லட்சத்து, 52,427 ரூபாய்க்கு விலை போனது. தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்ந்து, 36 லட்சத்து, 79,227 ரூபாய்க்கு ஏலம் போனது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 960 மூட்டை பி.டி., ரக பருத்தி வரத்தானது. ஒரு கிலோ, 78 ரூபாய் முதல் 89 ரூபாய் வரை, 275 குவிண்டால் பருத்தி, 24.48 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
