ADDED : மார் 04, 2026 09:15 AM
* ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 744 தேங்காய் வரத்தாகி, கிலோ, 22.10 - 52.02 ரூபாய்; நெல், 50 மூட்டை வரத்தாகி கிலோ, 19.40 - 23.02 ரூபாய்; தேங்காய் பருப்பு, 19 மூட்டை வரத்தாகி கிலோ, 112.09 - 156.09 ரூபாய்; நிலக்கடலை, 61 மூட்டை வரத்தாகி கிலோ, 90 - 94.06 ரூபாய்க்கு விற்றது.
* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 22,023 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ, 40.79 - 51.90 ரூபாய் விலையில், 7,287 கிலோ, 3.39 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. கொப்பரை தேங்காய், 270 மூட்டை வரத்தாகி, முதல் தரம் கிலோ, 153.19 - 165.04 ரூபாய், இரண்டாம் தரம், 123.19 - 159.50 ரூபாய் என, 12,364 கிலோ கொப்பரை தேங்காய், 19.39 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. எள் இரண்டு மூட்டை வரத்தாகி ஒரு கிலோ, 130 - 158 ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,142 மூட்டை பி.டி., ரக பருத்தி வரத்தானது. ஒரு கிலோ, 77 ரூபாய் முதல் 86 ரூபாய் வரை, 320 குவிண்டால், 25.60 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

