ADDED : மார் 20, 2026 04:28 AM
* ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 65 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 78.60 - 90.29 ரூபாய் முதல், 9,315 கிலோ நிலக்கடலை, 7.67 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 117 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 140.99 - 147.05 ரூபாய், இரண்டாம் தரம், 104.89 - 136.90 ரூபாய் என, 3,404 கிலோ கொப்பரை, 4.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், 55,000 எண்ணிக்கையில் வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 44.39 - 51.90 ரூபாய், பச்சை தேங்காய், 32.11 - 44.69 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 61.09 ரூபாய் என, 19,501 கிலோ தேங்காய், 9.11 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்-கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 37 ரூபாய், நேந்திரன், 32 ரூபாய்க்கும் விற்பனையா-னது. செவ்வாழை தார், 690 ரூபாய், தேன்வாழை, 460, பூவன், 400, ரஸ்த்தாளி, 580, மொந்தன், 220, ரொபஸ்டா, 310, பச்சை-நாடான், 430 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 5,070 வாழைத்தார்களும், 7.87 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 640 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 13.12 - 22.25 ரூபாய்க்கு விற்றது. சட்டசபை தேர்தல் வாகன சோதனையில், பறக்கும் படை அதிகா-ரிகள், உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்-கின்றனர். இதனால் பலர் தேங்காய் கொண்டு வரவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்-துக்கு, 340 மூட்டை காய்ந்த நிலக்கடலை கொண்டு வரப்பட்-டது. ஒரு கிலோ, 86 ரூபாய் முதல் 95 ரூபாய் என, 124 குவிண்டால் நிலக்கடலை, 10.30 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
