ADDED : மார் 28, 2026 05:14 AM
* ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த எள் ஏலத்துக்கு, 706 மூட்டை வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 111.62 - 170.69 ரூபாய், சிவப்பு ரகம், 98.42 - 138.09 ரூபாய் என, 52,964 கிலோ எள், 77 லட்சத்து, 43,558 ரூபாய்க்கு விற்பனையானது.
* கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. தேங்காய் குறைந்த விலை (கிலோ), 44 ரூபாய், அதிகபட்சம், 47 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 1,098 கிலோ தேங்காய், 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு குறைந்த பட்சம் கிலோ, 101 ரூபாய் முதல் 145 ரூபாய் வரை, 90 கிலோ தேங்காய் பருப்பு, 11 ஆயிரத்து, 983 ரூபாய்க்கு விற்பனையானது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 254 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 153.90 - 158.89 ரூபாய், இரண்டாம் தரம், 130.99 - 152.59 ரூபாய் என, 11,743 கிலோ கொப்பரை தேங்காய், 17 லட்சத்து, 84,434 ரூபாய்க்கு விலை போனது
