ADDED : ஏப் 05, 2026 05:06 AM
* ஈரோடு மாவட்டம் பவானி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 932 காய் வரத்தானது. ஒரு காய், 10.56 ரூபாய் முதல் 25.25 ரூபாய் வரை, 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 19,657 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ பச்சை தேங்காய், 36.99 - 44.60 ரூபாய், கசங்கல் காய், 43.09 - 54.69 ரூபாய் என, 7,090 கிலோ தேங்காய், 3.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* கோபி அருகே மொடச்சூரில் நேற்று கூடிய வாரச்சந்தையில், துவரம் பருப்பு (கிலோவில்), 130 ரூபாய்க்கு விற்றது. குண்டு உளுந்து மற்றும் பாசிப்பருப்பு தலா, 140 ரூபாய், பச்சை பயிர், 150 ரூபாய், கொள்ளு, 80, தட்டைப்பயிர், 110, சீரகம், 340, மல்லி, 160, வெந்தயம், 110, வரமிளகாய், 240, புளி, 220, பூண்டு, 200 ரூபாய்க்கும் விற்பனையானது. சந்தையில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில், 50 டன் பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு சுற்று வட்டார விவசாயிகள், 7,349 மூட்டைகளில், 3.38 லட்சம் கிலோ கொப்பரை கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் கிலோ, 143.89 ரூபாய் முதல் 158.50 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை, 5.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சேவல் சூதாட்டம்: 7 பேர் கைது
