ADDED : ஏப் 08, 2026 06:19 AM
* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,400 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 152.06 - 155.55 ரூபாய், இரண்டாம் தரம், 133.99 - 150.55 ரூபாய் என, 63,884 கிலோ கொப்பரை தேங்காய், 98 லட்சத்து, 438 ரூபாய்க்கு விற்பனையானது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 110 மூட்டை எள் வரத்தானது. ஒரு கிலோ கருப்பு ரகம், 135 - 158.09 ரூபாய், சிவப்பு ரகம், 105.59 - 132.19 ரூபாய் என, 8,471 கிலோ எள், 12 லட்சத்து, 22,326 ரூபாய்க்கு விற்பனையானது.
* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 593 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ நிலக்கடலை, 66.79 - 89.30 ரூபாய் என, 19,237 கிலோ நிலக்கடலை, 15 லட்சத்து, 67,612 ரூபாய்க்கு விலை போனது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 265 மூட்டை பி.டி., ரக பருத்தி கொண்டு வரப்பட்டது. ஒரு கிலோ, 82 ரூபாய் முதல் 86 ரூபாய் வரை, 73 குவிண்டால், 5.86 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
