ADDED : ஏப் 17, 2026 05:47 AM
* ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 41,000 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 46.59 - 53.60 ரூபாய், பச்சை தேங்காய், 35.60 - 44.10 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 72.60 ரூபாய்க்கான விலையில் விற்பனையானது. மொத்தம், 14,664 கிலோ தேங்காய், 7 லட்சத்து, 4,764 ரூபாய்க்கு விலை போனது. கொப்பரை தேங்காய், 125 மூட்டைகளில் வரத்தானது. முதல் தரம் கிலோ, 150.60 - 158.05 ரூபாய், இரண்டாம் தரம், 100.20 - 144.55 ரூபாய் என, 3,082 கிலோ கொப்பரை தேங்காய், 4.64 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தமிழக தேர்தலால் வியாபாரிகள், விவசாயிகள் குறைவான எண்ணிக்கையிலேயே வந்தனர். சந்தைக்கு, 6,000 முதல், 22,000 ரூபாய்க்கு, 30 கன்றுகள், 22,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 100 எருமை மாடுகள், 22,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 120 பசு மாடுகள், 55,000 ரூபாய்க்கு மேலான விலையில் முற்றிலுமான கலப்பின மாடுகள் வரத்தானது. வரத்தான மாடுகளில், 60 சதவீதம் விற்பனையானது.
* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு, 643 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ நிலக்கடலை, 60.16 - 84.40 ரூபாய் விலையில், 19,156 கிலோ நிலக்கடலை, 13 லட்சத்து, 98,220 ரூபாய்க்கு விலை போனது.
* பவானி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 1,326 காய்கள் வரத்தானது. ஒரு காய், 12.56 - 22.25 ரூபாய்க்கு விற்றது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி கிலோ, 35 ரூபாய், நேந்திரன், 22 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழைத்தார், 800 ரூபாய், தேன்வாழை, 670, பூவன், 640, ரஸ்த்தாளி, 500, மொந்தன், 100, ரொபஸ்டா, 320, பச்சைநாடான், 390 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 4,125, வாழைத்தார்களும், 7.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
