ADDED : ஏப் 18, 2026 05:43 AM
* ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில், குறைந்த விலை ஒரு கிலோ, 38 ரூபாய், அதிகபட்சம், 40 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 1,452 கிலோ தேங்காய், 56 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. சுற்று வட்டார விவசாயிகள், 15 ஆயிரத்து கிலோ எடையில், 42 ஆயிரத்து, 437 தேங்காய்களை கொண்டு வந்தனர். கருப்பு தேங்காய் கிலோ, 48.50 ரூபாய் முதல் 53 ரூபாய்; வெள்ளை தேங்காய் கிலோ, 32 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை, 7.50 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 718 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 155.39 - 165.88 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 128.89 - 153.09 ரூபாய் என, 34,320 கிலோ கொப்பரை தேங்காய், 53 லட்சத்து, 70,584 ரூபாய்க்கு விலை போனது.
