தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : ஏப் 27, 2026 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 04:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் கதளி கிலோ, 35 ரூபாய், நேந்திரன், 36 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழைத்தார், 840, தேன்வாழை, 560, பூவன், 510, ரஸ்த்தாளி, 460, மொந்தன், 130, ரொபஸ்டா, 370, பச்சை நாடான், 320 என வரத்தான அனைத்து வாழைத்தார்களும், 10.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

* வெள்ளகோவில் முருங்கைகாய் கொள்முதல் நிலையத்துக்கு, 3 டன் முருங்கை நேற்று வரத்தானது. கரும்பு முருங்கை கிலோ, 27 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையானது. போதிய மழை இல்லாத்தால் செடி மற்றும் மர முருங்கை வருவதில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

* அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடந்த ஏலத்தில், செவ்வாழை தார், 140-1,000 ரூபாய், தேன்வாழை தார், 90-560, பூவன் தார், 120-450, ரஸ்தாளி தார், 180-720, மொந்தன் தார், 20-60, ஜி-9 தார் 160-340, பச்சை நாடன் தார், 220-500, கதளி கிலோ, 18-32, நேந்திரன் கிலோ, 14-25 ரூபாய் என, வரத்தான, 3,800 தார் 5.86 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

* அந்தியூர் வாரச்சந்தையில் இரண்டு நாட்கள் கூடிய சந்தைக்கு, 2,500க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டன. ஜெர்சி இன மாடுகள், 2,000 ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய், நாட்டு இன மாடுகள், 2,500 ரூபாய் முதல் 53 ஆயிரம் ரூபாய், மலை மாடுகள், 2,000 ரூபாய் முதல் 52 ஆயிரம் ரூபாய், காங்கேயம் இன ஜோடி, 1.35 லட்சம் ரூபாய் என, 90 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us