ADDED : மே 08, 2026 03:58 AM
* ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 180 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 132.99 - 145 ரூபாய், இரண்டாம் தரம், 104.10 - 135.60 ரூபாய் என, 5,308 கிலோ கொப்பரை தேங்காய், 7.23 லட்சம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல் தேங்காய், 35,000 காய் வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 42.89 - 45.39 ரூபாய், பச்சை காய், 33.69 - 39.65 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 60.60 ரூபாய் என, 12,321 கிலோ தேங்காய், 5.40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* புஞ்சை காளமங்கலம் உப விற்பனை கூடத்துக்கு, 650 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 44 - 47 ரூபாய் என, 248 கிலோ தேங்காய், 11,481 ரூபாய்க்கு விற்பனையானது.
* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 725 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ நிலக்கடலை, 65.65 - 82.10 ரூபாய் என, 23,235 கிலோ நிலக்கடலை, 16 லட்சத்து, 92,307 ரூபாய்க்கு விற்பனையானது.
* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்திருந்தனர். இரு மாதங்களாக சட்டசபை தேர்தலால் பணம் எடுத்து வருவதில் சிக்கல் நீடித்ததால், குறைந்த எண்ணிக்கையில் வந்த நிலையில், அதிக எண்ணிக்கையில் நேற்று வந்தனர். சந்தையில், 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 70 கன்றுகள், 23,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 200 எருமை மாடுகள், 23,000 முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள், 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் முற்றிலுமான கலப்பின மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. 90 சதவீத மாடுகள் விற்றதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 20 ரூபாய், நேந்திரன், 12 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 710 ரூபாய், தேன்வாழை, 560, பூவன், 400, ரஸ்த்தாளி, 460, மொந்தன், 110, ரொபஸ்டா, 400, பச்சைநாடான், 300 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 6,030 வாழைத்தார்கள், 6.66 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 11 விவசாயிகள், 7,200 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ அதிகபட்சம், 76.59 ரூபாய், குறைந்தபட்சம், 57.69 ரூபாய் என, 5.10 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
