ADDED : மே 10, 2026 05:11 AM
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,196 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 139.09 - 141.68 ரூபாய், இரண்டாம் தரம், 70.99 - 136.60 ரூபாய் என, 57,642 கிலோ, 79 லட்சத்து, 69,612 ரூபாய்க்கு விலை போனது. தேங்காய், 33,706 காய்கள் வரத்தானது. ஒரு கிலோ பச்சை காய், 33.29 - 39.39 ரூபாய், கசங்கல் காய், 40.20 - 44.49 ரூபாய்க்கும் விற்றது.
* பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம் நடந்தது. மொத்தம், 230 மூட்டை வரத்தானது. வரக்காய் கிலோ, 205.10 - 222 ரூபாய், பாக்குபழம் கிலோ, 76.50 - 80 ரூபாய், பச்சை காய் கிலோ, 61.40 - 63.30 ரூபாய், சாலி பாக்கு, 411 - 420 ரூபாய்க்கும் விற்றது.
* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 2,200 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,320 - 1,450 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. உருண்டை வெல்லம், 2,850 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,330 - 1,420 ரூபாய்; அச்சு வெல்லம், 240 மூட்டைகள் வரத்தாகி ஒரு மூட்டை, 1,420 - 1,450 ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூர் வாரச்சந்தையில் நேற்று கூடிய கால்நடை சந்தைக்கு, 1,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டன. ஜெர்சி இன மாடுகள், 2,000 ரூபாய் முதல் 48 ஆயிரம் ரூபாய், நாட்டின மாடுகள், 2,500 ரூபாய் முதல் 53 ஆயிரம் ரூபாய், மலை மாடுகள், 2,000 ரூபாய் முதல் 51 ஆயிரம் ரூபாய், காங்கேயம் இன ஜோடி, 1.30 லட்சம் ரூபாய்க்கும் விற்றது.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை ச
ங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. 1.67 லட்சம் கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 138.90 ரூபாய் முதல் 144.44 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 26 ரூபாய் முதல் 139.80 ரூபாய்க்கு விற்றது.
