ADDED : மே 12, 2026 05:06 AM
* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 1.60 லட்சம் தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. கறுப்பு ரகம் ஒரு கிலோ, 40.60 - 44.45 ரூபாய், பச்சை காய், 36.26 - 38.26 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 50.36 ரூபாய் என, 58,792 கிலோ தேங்காய், 24 லட்சத்து, 65,989 ரூபாய்க்கு விலை போனது.
* கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, 2,940 ரூபாய் முதல், 3,000 ரூபாய்; இரண்டாம் தரம் (மீடியம்), 2,760 ரூபாய் முதல், 2,850 ரூபாய் வரை, 991 நாட்டு சர்க்கரை மூட்டைகளை, 29.08 லட்சத்துக்கு, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
* கோபி தாலுகா சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ரகங்களுக்கான ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 150 கிலோ வரத்தாகி, கிலோ, 165 ரூபாய், பனங்கருப்பட்டி, 500 கிலோ வரத்தாகி, 205 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான அனைத்து கருப்பட்டி ரகங்களும், 1.27 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* அந்தியூரில் நேற்று கூடிய வெற்றிலை சந்தைக்கு, 40 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி வெற்றிலை சிறிய கட்டு, 50 ரூபாய், பெரிய கட்டு, 70 ரூபாய் முதல் 80, பீடா வெற்றிலை கட்டு, 25 முதல் 30 ரூபாய், செங்காம்பு வெற்றிலை கட்டு, 20 முதல் 35 ரூபாய் வரை, 4.50 லட்சம் ரூபாய்க்கு வெற்றிலை விற்றது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 10,224 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 38-42 ரூபாய்; 94 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 130-140 ரூபாய்; 32 மூட்டை மக்காச்சோளம் வரத்தாகி கிலோ, 19-21 ரூபாய்; 21 மூட்டை எள் வரத்தாகி கிலோ, 126-141 ரூபாய்; நான்கு மூட்டை ஆமணக்கு வரத்தாகி கிலோ, 72-75 ரூபாய்க்கும் விற்றது.
* திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 2,630 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு மூட்டைகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ அதிகபட்சம், 145.25 ரூபாய், குறைந்தபட்சம், 126.90 ரூபாய்க்கும் ஏலம் போனது.
