தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : மே 15, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 180 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 134.10 - 142.51 ரூபாய், இரண்டாம் தரம், 113.60 - 130.99 ரூபாய் என, 6,098 கிலோ கொப்பரை, 8.17 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. தேங்காய், 70,000 எண்ணிக்கையில் வரத்தானது. கருப்பு தேங்காய் கிலோ, 40.89 - 44.69 ரூபாய், பச்சை காய், 33.69 - 39.65 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 55.65 ரூபாய்க்கு விற்றது.

* ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் மாட்டு சந்தை நேற்று நடந்தது. சந்தைக்கு, 6,000 முதல், 24,000 ரூபாய் மதிப்பில், 50 கன்று, 22,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 150 எருமை மாடுகள், 22,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 250 பசு மாடுகள், 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் கலப்பின மாடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர். கடும் வறட்சி நிலவும் நிலையில், மழை குறைந்து, பசுந்தீவனம் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் மாடுகளை வாங்க தயக்கம் காட்டியதால், 80 சதவீத மாடுகளே விற்பனையானது.

* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம், 16 மூட்டை வரப்பெற்றது. ஒரு கிலோ அதிகபட்சம், 141.59 ரூபாய், குறைந்தபட்சம், 110.99 ரூபாய்க்கு விற்றது.

* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 425 மூட்டை நிலக்கடலையை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 67.61 - 85.80 ரூபாய் என, 13,614 கிலோ, 10 லட்சத்து, 68,794 ரூபாய்க்கு விற்றது.

* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 30 ரூபாய்க்கும், நேந்திரன், 23 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழைத்தார், 630, தேன்வாழை, 500, பூவன், 460, ரஸ்த்தாளி, 530, மொந்தன், 150, ரொபஸ்டா, 300. பச்சைநாடான், 310 ரூபாய்க்கும் விற்றது. வரத்தான, 4.030 வாழைத்தார்களும், 5.96 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

* கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. ஒரு கிலோ, 130 ரூபாய் முதல் 141 ரூபாய் வரை விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us