ADDED : மே 16, 2026 05:21 AM
* ஈரோடு மாவட்டம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஒரு கிலோ, 39 ரூபாய் முதல் 41 ரூபாய் வரை விற்பனையானது. தேங்காய் பருப்பு ஏலத்தில், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 105 ரூபாய் முதல் 126 ரூபாய் வரை விற்பனையானது.
*புஞ்சை காளமங்கலம் உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 1,750 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. கருப்பு ரகம் ஒரு கிலோ, 39 - 41.99 ரூபாய்க்கு விற்பனையானது.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு பெருந்துறை சுற்று வட்டார பகுதி விவசாயிகள், 20 ஆயிரம் கிலோ எடையில், 53 ஆயிரத்து, 932 தேங்காய்களை கொண்டு வந்தனர். கருப்பு தேங்காய் ஒரு கிலோ, 40.27 ரூபாய் முதல் 44.39 ரூபாய்; வெள்ளை தேங்காய் கிலோ, 34.69 ரூபாய் முதல் 38.59 ரூபாய், தண்ணீர் வற்றிய காய் கிலோ, 51.90 ரூபாய்க்கும் விற்றது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 1,161 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 138.08 - 141.98 ரூபாய், இரண்டாம் தரம், 71.99 - 135 ரூபாய் என, 57,382 கிலோ எடை கொப்பரை, 79.28 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
