ADDED : மே 20, 2026 05:47 AM
* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,510 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 138.90 - 143.77 ரூபாய், இரண்டாம் தரம், 105.39 - 138.80 ரூபாய் என, 71,487 கிலோ கொப்பரை தேங்காய், 1.33 கோடி ரூபாய்க்கு விற்றது.
* சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. சுற்று வட்டார விவசாயிகள், 1,115 தேங்காய் கொண்டு வந்தனர். ஒரு கிலோ ஒரே விலையாக, 41 ரூபாய்க்கு ஏலம் போனது.
* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 53,705 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ தேங்காய், 34.59 - 43.85 ரூபாய் வரை, 17,498 கிலோ தேங்காய், 7.19 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. கொப்பரை தேங்காய், 522 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 139.89 - 153.40 ரூபாய், இரண்டாம் தரம், 110.39 - 140.89 ரூபாய் என, 24,541 கிலோ கொப்பரை தேங்காய், 34 லட்சத்து, 39,451 ரூபாய்க்கு விற்பனையானது. எள், 159 மூட்டை வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 122.69 - 133.89 ரூபாய், சிவப்பு ரகம், 110.89 - 139.79 ரூபாய் என, 11,868 கிலோ எடை கொண்ட எள், 14 லட்சத்து, 98,003 ரூபாய்க்கு விற்பனையானது.
