ADDED : மே 22, 2026 05:37 AM
* ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 150 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 142.10 - 133 ரூபாய், இரண்டாம் தரம், 100 - 135.05 ரூபாய் என, 4,037 கிலோ கொப்பரை தேங்காய், 5.34 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், 55,000 எண்ணிக்கையில் வரத்தானது. கருப்பு தேங்காய் கிலோ, 40.06 - 42.75 ரூபாய், பச்சை தேங்காய், 34.49 - 36.59 ரூபாய் என, 20,142 கிலோ தேங்காய், 8.19 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 368 மூட்டைகளில் நிலக்கடலை விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ நிலக்கடலை, 68.60 - 86.30 ரூபாய் என, 11,757 கிலோ நிலக்கடலை, 9.03 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* புஞ்சை காளமங்கலம் உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 2,600 தேங்காய் வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 39.69 - 42.89 ரூபாய் என, 998 கிலோ தேங்காய், 40,734 ரூபாய்க்கு விலை போனது.
* புன்செய்புளியம்பட்டியில் புதன் மற்றும் வியாழக்கிழமை கால்நடை சந்தை நடந்தது. நேற்று நடந்த சந்தைக்கு, 300 ஆடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் விற்பனை மந்தமாகவே இருந்தது. 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு, 8,000 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. மேலும் ஒரு ஆட்டின் விலை, 4,000 ரூபாய் வரை உயர்ந்தது விற்பனையானது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி மற்றும் நேந்திரன் கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாழைத்தார், 710, தேன்வாழை, 680. பூவன், 620, ரஸ்த்தாளி, 560, மொந்தன், 200, ரொபஸ்டா, 500, பச்சைநாடான், 430 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 3,011 வாழைத்தார், 6.81 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம், 24 மூட்டை வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 145.09 ரூபாய், குறைந்தபட்சம், 120.59 ரூபாய் என, 11.89 குவிண்டால், 1.19 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த சூரியகாந்தி விதை ஏலத்துக்கு, 13,914 கிலோ விதைகளை பல்வேறு பகுதி விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ அதிகபட்சம், 83.38 ரூபாய், குறைந்தபட்சம், 73.62 ரூபாய் என, 11 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
