தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : மே 24, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஈரோடு மாவட்டம் பவானி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், பாக்கு ஏலம் நடந்தது. வரக்காய் கிலோ, 208.20 - 211.30 ரூபாய், பாக்குபழம் கிலோ, 71.30 - 75.30 ரூபாய், பச்சை காய் கிலோ, 63 - 65 ரூபாய், சாளி பாக்கு கிலோ, 394.40 - 410.10 ரூபாய், ஆப்பி பாக்கு கிலோ, 455 - 465 ரூபாய் என, 292 மூட்டைகள் வரத்தாகி, 24 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 1,059 மூட்டை எள் விற்பனைக்கு வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 100.99 - 151.99 ரூபாய், சிவப்பு ரக்ம, 95.99 - 148.29 ரூபாய் என, 79,111 கிலோ கொண்ட எள், 1.75 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

* கோபி அருகே மொடச்சூரில் நேற்று கூடிய வாரச்சந்தையில், துவரம் பருப்பு(கிலோவில்), 120 ரூபாய்க்கும், குண்டு உளுந்து, 130, பச்சைபயிர், 145, பாசிப்பருப்பு. 140, கடலைப்பருப்பு, 110, கடுகு, 120, சீரகம், 350, வெந்தயம் மற்றும் பொட்டுக்கடலை, தலா 100 ரூபாய்க்கும், மல்லி, 160, வரமிளகாய், 240, புளி, 150 முதல், 180 ரூபாய்க்கும், பூண்டு, 150 முதல், 240 ரூபாய்க்கும், கருப்பு சுண்டல், 90, வெள்ளை சுண்டல், 95, மிளகு, 800 ரூபாய்க்கு விற்பனையானது.

* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 3,403 மூட்டைகளில், 2.21 லட்சம் கிலோ கொப்பரையை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 130.39 ரூபாய் முதல் 142.20 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 70.99 ரூபாய் முதல் 135.39 ரூபாய் என, 3.03 கோடி ரூபாய்க்கு விற்றது.

* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 32,363 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ பச்சை தேங்காய், 31.29 - 37.39 ரூபாய், கசங்கல் காய், 38.29 - 42.89 ரூபாய் என, 11,505 கிலோ தேங்காய், 4.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

* சித்தோடு வெல்லம் சொசைட்டியில், 30 கிலோ எடை கொண்ட, 2,150 மூட்டைகள் நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,310 - 1,420 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 2,800 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,320 - 1,400 ரூபாய்; அச்சு வெல்லம், 160 மூட்டைகள் வரத்தாகி ஒரு மூட்டை, 1,500 - 1,550 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட அச்சு வெல்லம் மூட்டைக்கு, 60 ரூபாய் உயர்ந்தது. நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் விலையில் மாற்றம் இல்லை.

* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி கிலோ, 53 ரூபாய், நேந்திரன், 45 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழைத்தார், 800, தேன்வாழை, 700, பூவன், 680, ரஸ்த்தாளி, 660, மொந்தன், 200, ரொபஸ்டா, 420, பச்சைநாடான், 410 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 3,800 வாழைத்தார்கள், 8.49 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 14 ரூபாய் முதல் 23 ரூபாய் வரை, 8,400 தேங்காய், 1.36 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 16,060 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 43.90 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 33.15 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதேபோல் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 1,046 கிலோ வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 139 ரூபாய், குறைந்தபட்சம், 100.70 ரூபாய்க்கும் வர்த்தகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us